Saturday, March 10, 2012

நீ
இல்லாதுபோனால்

அந்த இடம்

சூன்யமாகிவிடாது..



வேறோன்று

நிரப்பிவிடும்.



காலச்சூறாவளியில்

உன் தடயமும்

காணாமல் போய்விடும்.



நேற்றின் சுவடுகளைத்

தடவிப் பார்க்கலாம்

தழுவமுடியாது



நாளைக் கனவுகளில்

மிதந்து திரியலாம்

கரைந்து போக இயலாது



இன்றின்

யதார்த்த்ச் சூட்டில்

பாதம் கொப்பளிக்க

நடந்தாக வேண்டும்



பொய்கலவாத

உண்மையோ

மெய்கலவாத

பொய்யோ

எங்ஙணும் இல்லை



செம்புகலவாமல்

தங்கம்

நகையாவதில்லை

மேனிக்கு

எழிற்சேர்ப்பதில்லை



உன்

வாழ்வின் எச்சங்களை

வரலாறு பதிந்துகொள்ளட்டும்



நொடிகளில்

மரணம்

கதவைத் தட்டலாம்



நொடிகளுக்கிடையேயும்

வாழ்க்கையுண்டு



நீ

வாழும்போது

பிறர் புன்னகைக்கட்டும்



உன்

மரணத்தின்போது

அண்டைவீட்டாரின்

ஒரு துளி கண்ணீர்

அடையாளம் காட்டட்டும்



நீ

இல்லாதுபோனால்

அந்த இடம்

சூன்யமாகிவிடாது..





-சு.பொ.அகத்தியலிங்கம்

Thursday, March 8, 2012

காதல் கவிதைகள்...

காதல் தோல்வியா அழு...
வாய் விட்டு அழு, கதறிக் கதறி அழு...
உன் கண்ணீரோடு காதலும்
கரைந்து போகும்வரை அழு...

பின்பு உலகத்தைப் பார்...

காதலையும் மீறி
எத்தனையோ அழகுகள்..
காதல் தோல்வியும் தாண்டி
எத்தனையோ பிரச்சனைகள்..

அழகுகளை ரசிக்கக் கற்றுக்கொள்...
பிரச்சினைகளை தீர்க்க பழகிக்கொள்..
வாழ்வதற்கே வாழ்க்கையென்பதை புரிந்துகொள்...!

பெற்றவள் இறந்தாலே
கண்ணீர்தான் சிந்துகிறாய்...
காதல் இறந்ததற்கா
உயிரைச் சிந்தத் துணிகிறாய்..

காதல் புனிதமானதுதான்...
புனிதமானதெதுவும்
உயிரை விலையாய் கேட்பதில்லை.

விலங்குகளை பலி கொடுத்து
கடவுளின் புனிதத்தை கெடுக்கிறோம்..
நம்மையே பலிகொடுத்து
காதலின் புனிதத்தை கெடுக்கிறோம்..

நண்பா..
காதல் தோல்வியா..?

காதலியை வெறுத்திருந்தால்
தேடிச் சென்ற காதலை மறந்து
தேடிவரும் காதலை அணைத்துக்கொள்..

காதலையே வெறுத்திருந்தால்
களவைப் போல் காதலையும்
கற்று மறந்தாய் நினைத்துக்கொள்..

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே
என்பதைப் புரிந்துகொள்...

காதல் கவிதைகள்

போடி போடி கல்நெஞ்சி..!

மார்புக்கு ஆடை
மனசுக்கு பூட்டு
ஒரே பொழுதில்
... இரண்டும் தரித்தவளே..!

காதல் தானடி
என்மீதுனக்கு.?

பிறகேன்
வல்லரசின்
ராணுவ ரகசியம்போல்
வெளியிட மறுத்தாய்.?

தூக்குக்கைதியின்
கடைசி ஆசைபோல்
பிரியும்போது ஏன்
பிரியம் உரைத்தாய்.?

நஞ்சு வைத்திருக்கும்
சாகாத நாகம்போல்
இத்தனை காதல் வைத்து
எப்படி உயிர் தரித்தாய்.?

இப்போதும் கூட
நீயாய்ச் சொல்லவில்லை
நானாய்க் கண்டறிந்தேன்

இமைகளின் தாழ்வில் -
உடைகளின் தளர்வில் -

என்னோடு பேசமட்டும்
குயிலாகும் உன்குரலில் -

வாக்கியம் உட்காரும்
நீளத்தில் -
வார்த்தைகளுக்குள் விட்ட
இடைவெளியில் -

சிருங்காரம் சுட்ட
பெருமூச்சில் -

வறண்ட உதட்டின்
வரிப்பள்ளங்களில் -

நானாய்த்தான் கண்டறிந்தேன்
காதல் மசக்கையில்
கசங்கும் உன் இதயத்தை..

சேமித்த கற்பு
சிந்தியா போயிருக்கும்.?

நீயாக கேட்டிருந்தால்
நெஞ்சு மலர்ந்திருப்பேன்

உண்டென்றால்
உண்டென்பேன்..
இல்லையென்றால்
இல்லையென்பேன்..

இப்போதும் கூட
தேசத்துரோகமென்பதை
ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி
உள்ளாடும் காதலை
ஒளிக்கவே பார்க்கிறாய்..

காதலில்
தயக்கம் தண்டனைக்குரியது
வினாடி கூட
விரயமாதல் கூடாது..

காலப் பெருங்கடலில்
நழுவி விழும் கணங்களை
மீண்டும் சேகரிக்க
ஒண்ணுமா உன்னால்..

இந்தியப் பெண்ணே.!
இதுவுன்
பலவீனமான பலமா.?
பலமான பலவீனமா.?

என்
வாத்தியக்கூடம்வரை
வந்தவளே..

உன் விரல்கள்
என் வீணைதடவ வந்தனவா.?

இல்லை
புல்லாங்குழல் துளைகளைப்
பொத்திப்போக வந்தனவா.?

என் நந்தவனத்தைக்
கிழித்துக்கொண்டோடிச்
சட்டென்று வற்றிவிட்ட நதி நீ..

உன் காதலறிந்த கணத்தில்
என் பூமி பூக்களால் குலுங்கியது..

நீ வணங்கிப் பிரிந்தவேளை
என் இரவு நடுங்கியது..

பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானே
காதலையே அறிவித்தாய்..

இருபதா.? முப்பதா.?
எத்தனை நிமிடம்?
என் மார்பு தோய்ந்து நீ
அழுததும் தொழுததும்..

என் பாதியில்
நீ நிறையவும்,
உன் பாதியில்
நான் நிறையவும்,
வினாடித்துகள் ஒன்று
போதுமே சிநேகிதி..

நேரம் தூரம் என்ற
தத்துவம் தகர்த்தோம்..

நிமிஷத்தின் புட்டிகளில்
யுகங்களை அடைத்தோம்..

ஆலிங்கனத்தில்
அசைவற்றோம்..

உணர்ச்சி பழையது..
உற்றது புதியது..

இப்போது
குவிந்த உதடுகள்
குவிந்தபடி
முத்தமிட நீயில்லை..

தழுவிய கைகள்
தழுவியபடி
சாய்ந்து கொள்ள நீயில்லை..

என் மார்புக்கு வெளியே
ஆடும் என் இதயம்
என் பொத்தானில் சுற்றிய
உன் ஒற்றை முடியில்..

உன் ஞாபக வெள்ளம்
தேங்கி நிற்குது
முட்டி அழுத்தி நீ
முகம்பதித்த பள்ளத்தில்..

தோட்டத்துப் பூவிலெல்லாம்
நீ விட்டுப்போன வாசம்..

புல்லோடு பனித்துளிகள்
நீவந்துபோன அடையாளமாய்க்
கொட்டிக் கிடக்கும்
கொலுசுமணிகள்..

நம் கார்காலம்
தூறலோடு தொடங்கியது
வானவில்லோடு நின்றுவிட்டது.

உன் வரவால்
என் உயிரில் கொஞ்சம்
செலவழிந்து விட்டது..

இந்த உறவின் மிச்சம்
சொல்லக்கூடாத
சில நினைவுகளும்..

சொல்லக்கூடிய
ஒரு கவிதையும்...!